மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் அவலம் !

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் அவலம் !
கழிவு நீரால் நிறைந்த மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் தெப்பக்குளம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் அவலம் -குளத்திற்கு வரும் வடிகால் பாதைகளை சீரமைக்க கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் உள்ளது. கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவது வழக்கம். இங்கு மாசி பெருந்திருவிழா நாளை 3-ம் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பதற்காக கோயில் மேற்கு பகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு பேச்சிப்பாறை அணை நீர் லட்சுமிபுரம் கால்வாய் வழியாக கொண்டுவரப்படுகிறது. ஆனால் கடந்த சில வருடங்களாக நீர் குளத்தில் சென்றடையாமல் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் குளத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தெற்கு பகுதியில் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஷவர் கழிவு நீர்கள் தற்போது வெளியேறும் வடிகால் பழுதாகி, தெப்பகுளத்தில் தேங்குகிறது. தற்போது இந்த தண்ணீர் பாசி பிடித்து மாசுபட்டு உள்ளது. கடந்த சில வருடங்களாகவே லட்சுமிபுரம் கால்வாய் நீர் இந்த குளத்திற்கு கொண்டு வரும் முயற்சி தோல்வில்தான் முடிந்துள்ளது. எனவே குளத்திற்கு வரும் வடிகால் பாதைகளை சீரமைக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story