மண்டைக்காடு கோவில் மாசி திருவிழா: போக்குவரத்து மாற்றம்
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த 3-ம் தேதி தொடங்கி Something வருகிறது. இந்த திருவிழாவில் தமிழ்நாட்டின் புறப்பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் மண்டைக்காடு வந்து செல்வதற்காக 9-ம் தேதி ஆன இன்று முதல் 12 ஆம் தேதி வரை போக்குவரத்தில் கீழ்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் இருந்து மண்டைக்காடு கோயிலுக்கு வரும் சிறப்பு பேருந்துகள் அனைத்தும் மண்டைக்காடுபுதூர் தற்காலிக பேருந்து நிலையம் வந்து திரும்பி செல்லுமாறு மாற்றப்படுகிறது.
குளச்சல் பள்ளி முக்கு மண்டைக்காடு கோயிலுக்கு வரும் சிறப்பு பேருந்துகள் அனைத்தும் வெட்டுமடை தற்காலிக பேருந்து நிலையம் வரை வந்து திருப்பி செல்லுமாறுமாற்றப்படுகிறது. நாகர்கோவில் இருந்து குளச்சலுக்கு மண்டைக்காடு மார்க்கமாக செல்லும் ரூட் பஸ்களின் வழித்தடம் மாற்றப்பட்டு மனவளக்குறிச்சி, பிள்ளையார் கோவில், சேரமங்கலம், திங்கள் நகர், கல்லுக் கூட்டம் வழியாக குளச்சலுக்கு செல்லுமாறு மாற்றப்பட்டுள்ளது.
குளச்சல் பேருந்து நிலையத்திலிருந்து மண்டைக்காடு மார்க்கமாக நாகர்கோவிலுக்கு செல்லும் ரூட் பஸ்கள் அனைத்தும் உடையார் விளை, திங்கள் நகர், சேரமங்கலம், பிள்ளையார் கோவில், மணவாளக்குறிச்சியாக வழியாக செல்லுமாறு மாற்றப்பட்டுள்ளது. நாகர்கோவில் அல்லது மனவளக்குறிச்சியிலிருந்து சேரமங்கலம், கோவிலன் விளை, நடுவூர் கரை .ரூட் பஸ்கள் அனைத்தும் வழித்தடம் மாற்றப்பட்டு சேரமங்கலம், திங்கள் நகர், லட்சுமிபுரம் வழியாக நடுவூர் கரை தற்காலிக பேருந்து நிறுத்தம் செல்லுமாறு மாற்றப்படுகிறது.
திருவனந்தபுரம், மார்த்தாண்டம், தக்கலை, இரணியல் மார்க்கமாக மண்டைக்காடு கோயிலுக்கு செல்லும் சிறப்பு பேருந்துகள் லட்சுமிபுரம் வழியாக நடுவூர் கரை - தற்காலிக பஸ் நிறுத்தம் வந்து மீண்டும் அதே வழியில் செல்லுமாறு மாற்றப்படுகிறது. மேற்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்து இயக்கப்படும்போது, பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் உரிய ஒத்துழைப்பு நல்குமாறு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.