மண்டைக்காடு கோவில் திருவிழா நாளை பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் மாசிக் கொடை விழாவில் ஒன்பதாம் நாளான நாளை பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடக்கிறது. விழாவின் ஆறாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு பிரசித்தி பெற்ற வலிய படுக்கை என்னும் மகா பூஜை நடந்தது. எட்டாம் நாளான இன்று பகல் 12 மணிக்கு நடுவூர்கரை சிவசக்தி கோவில் பக்தர்கள் சார்பில் மாவிளக்கு ஊர்வலம், மாலை 6 மணிக்கு தங்கரதம் ஊர்வலம், 6:15க்கு சிராயன் விளை பக்தர்கள் சார்பில் சந்தனக் குடம் ஊர்வலம், காட்டு விளை சிவசக்தி மந்திர வித்யாவிடம் சார்பில் பால்குடம் மற்றும் காவடி ஊர்வலங்கள் நடக்கிறது.
ஒன்பதாம் நாளான நாளை காலை 11 மணிக்கு உண்ணாமலை கடை பட்டாரியர் சமுதாயம் சார்பில் சந்தனக் குட ஊர்வலம், மதியம் 12 மணிக்கு பைங்குளம் ஸ்ரீ கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து சந்தனக் குடம், காவடி மற்றும் தெய்யம் ஊர்வலம், மாலையில் கூட்டுமங்கலம் ஊர் பக்தர்கள் சார்பில் சந்தனக் குடம் ஊர்வலம், இரவு 9:30க்கு பெரிய சக்கர தீ வெட்டியுடன் அம்மன் வெள்ளி பல்லக்கில் ஊர்வலம் போன்றவை நடக்கிறது. நிறைவு நாளான 12-ம் தேதி இரவு 9:30 மணிக்கு அம்மன் ஊர்வலம், நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடுக்கு பூஜையும் நடக்கிறது.