மண்டைக்காடு கோவில் மாசி கொடை : இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை

மண்டைக்காடு கோவில் மாசி கொடை :  இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை
X
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் நேற்று இரவு நடந்த பெரிய சக்கர தீ வெட்டி ஊர்வலம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா கடந்த 3 -ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒன்பதாம் திருவிழாவான நேற்று இரவு முக்கிய வழிபாடு நிகழ்ச்சியான பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு உண்ணாமலை கடை பட்டாரியர் சமுதாயம் சார்பில் சந்தனக் குடம் ஊர்வலம், மதியம் புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோவில் இருந்து சந்தனகுடம் மற்றும் காவடி ஊர்வலம் போன்றவை மண்டைக்காடு திருக்கோவிலுக்கு வந்தடைந்தன.

மாலையில் தங்கத் தேர் உலா, கூட்டு மங்கலம் ஊர் மக்கள் சார்பில் சந்தனக் குடம் ஊர்வலம், இரவு அத்தாழ பூஜை தொடர்ந்து பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் போன்றவை நடைபெற்றது. விழாவின் இறுதி நாளான இன்று நள்ளிரவு நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக்கோவிலுக்கு கொண்டு வருதல், பின்னர் 12:30 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் ஒடு பூஜை நடக்கிறது. இந்த ஒடுக்கு பூஜையில் பக்தர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து அம்மனை வழிபடுவது வழக்கம். அதன் பின்னர் திருக்கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags

Next Story