மண்டையூர் அய்யனார் கோயிலில் தேர்த்திருவிழா தொடக்கம்!

மண்டையூர் அய்யனார் கோயிலில் தேர்த்திருவிழா தொடக்கம்!

தேர்த்திருவிழா

மண்டையூர் அய்யனார் கோயிலில் தேர்த்திருவிழா தொடக்கம்!
விராலிமலை ஒன்றியம் மண்டை யூரில் பூர்ண புஷ்கலாம்பிகா சமேத பெரிய அய்ய னார் சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த 1ம் தேதி மண்டையூர் மடப்பள்ளியில் முகூர்த்தம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது. 5ம் தேதி நள்ளிரவு சேமம் திறந்து சாமி மடப்பள்ளி வரும் நிகழ்ச்சியும், மறுநாள் மண் டையூரில் ஆதிதிராவிடர்கள் சார்பில் நாடக நிகழ்ச் சியுடன் சுவாமி செடிகோயில் செல்லும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு கோயில் சன்ன தியில் காப்பு கட்டப்பட்டு அதிகாலை 3 மணிளவில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க ஊர்வலமாக காலை 7 மணி யளவில் மண்டையூர் தெருக்கூடம் சாவடியை வந் தடைந்தது. விழா நாட்களில் தினமும் மண்டகப்ப டிதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சுவாமி வீதியுலா ஆகியவை நடக்கின்றன. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 20ம் தேதி மாலை 3 மணிக்கு நடக்கிறது. அதைத்தொடர்ந்து 21ம் தேதி படுகளம் பாரிவேட்டை நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும், 26ம் தேதி இரவு 11 மணியளவில் சுவாமி சேமத்தில் வைக்கப்படும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், விழா கமிட்டியினர், கோயில் நிர்வா கிகள் செய்து வருகின்றனர்.

Tags

Next Story