ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை

சிவகங்கை நகரில் உள்ள ஐயப்ப சுவாமி கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை விழாவை முன்னிட்டு, கொடியேற்ற நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோவிலில் மூன்றாம் ஆண்டு மண்டல பூஜை விழாவை முன்னிட்டு கொடியேற்ற வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக சுவாமி சன்னதி முன்பு உள்ள கொடி மரத்தில் அருள் பாலிக்கும் அஷ்டலட்சுமிகளுக்கு பால், மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமணத் திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கொடி மரத்திற்கு தர்ப்பைப்புல், பூமாலை, பட்டு வஸ்திரம் சாற்றி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க ஐயப்ப சுவாமி திருவுருவம் படம் வரையப்பட்ட வஸ்திரத்தை கொண்டு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. நிறைவாக மூலவர் ஐயப்ப சுவாமிக்கும், கொடி மரத்திற்கும் உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வழிபட்டனர். பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் மூலவர் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் பல்லக்கு திருஉலாவும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பத்தாம் திருநாளில் ஐயப்ப சுவாமி பவனியும் நடைபெறுகிறது .
