கீழ்பெரும்பாக்கம் சபரிகிரீசன் கோவிலில் மண்டல பூஜை.
கீழ்பெரும்பாக்கம் சபரிகிரீசன் கோவிலில் மண்டல பூஜை
ஐயப்ப சுவாமி மண்டல பூஜையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் வண்ணான் குளக்கரை பகுதியில் பிரசித்தி பெற்ற சபரிகிரீசன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மண்டல பூஜை விழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அய்யப்ப சாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள், குங்குமம், இளநீர், நெய் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நூற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் ஒன்றுகூடி பஜனை பாடல்கள் பாடியும், 18 படிகளில் விளக்கு ஏற்றியும் வழிபட்டனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சபரிகிரீசனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான காகுப்பம், பொய்யப்பாக்கம், மகாராஜபுரம், கோலியனூர், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story