ஐயப்பன் சுவாமிக்கு மண்டல பூஜை

ஐயப்பன் சுவாமிக்கு மண்டல பூஜை

மண்டல பூஜை

ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள உடல் மாரியம்மன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் 11வது ஆண்டு மண்டல பூஜை விழா, கணபதி யாகத்துடன் நேற்று முன்தினம் மாலை துவங்கியது. மூலவர் மற்றும் உற்சவர் ஐயப்ப சுவாமிக்கு சொர்ணாபிஷேகம், தேன், சந்தனம், நெய் உட்பட பல்வேறு 16 வகையான விசேஷ பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் உற்சவர் ஐயப்ப சுவாமி கோவில் உட்பிரகாரம் உலா நடந்தது. பொதுமக்கள் ஐயப்ப சுவாமிக்கான பஜனை பாடல்களை பாடினர். 18 படி விளக்கேற்றப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story