வையாபுரி கோயிலில் மண்டலாபிஷேகம்
பொன்னமராவதி அருகே வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மண்டல பூஜைகள் நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தினமும் மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வந்தன. நிறைவு விழாவில் பால சுப்பிரமணிய பட்டர், கணேச பட்டர், பிரபு ஆகி யோர் பூஜைகளை நடத்தினர். விழாவில் வையாபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக் கணக்கான பக்தர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருப்பணிக் குழுத் தலைவர் வள்ளியப்பன், உப தலைவர்கள் சுப்பிரமணி யன், சிங்காரம், பொருளாளர் ராமநாதன் மற்றும் கும்பாபிஷேக கமிட்டி உறுப்பினர்கள், நாட்டார்கள், நகரத்தார்கள், கோவனுார்,மதியாணி, கண்டெடுத் தான்பட்டி, வாழைக்குறிச்சி, அரசமலை, வையாபுரி ஊரார்கள், இல்லனிப்பட்டி பாண்டிலிங்கம் குடும்பத்தார், செம்பூதி சுப்பையா குடும் பத்தார் செய்திருந்தனர்.
Next Story