மாமல்லபுரம் அருகே மாம்பழ சீசன் துவக்கம்: களைக்கட்டும் விற்பனை

மாமல்லபுரம் அருகே மாம்பழ சீசன் துவக்கம்: களைக்கட்டும் விற்பனை
களைக்கட்டும் மாம்பழம் விற்பனை
மாமல்லபுரம் அருகே மாம்பழ சீசன் களைக்கட்டியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே இடைக்கழிநாடு, கூவத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தோப்புகளில், ருமானி, பங்கனபள்ளி, நீலம் உள்ளிட்ட வகைகளில் மாம்பழங்கள் காய்க்கின்றன. வெளிமாவட்ட மொத்த வியாபாரிகள், சில மாதங்கள் முன்பே, குறிப்பிட்ட தொகைக்கு குத்தகை பெறுகின்றனர்.

மரங்களில் பூக்கள் பூத்ததும், பூச்சிகள் தாக்காமல் மருந்து தெளித்து பாதுகாத்து பராமரிக்கின்றனர். காய்களை மரத்திலேயே இயற்கையாக பழுக்க விடுகின்றனர். ஒரு கிலோவிற்கு குறிப்பிட்ட தொகை நிர்ணயித்து, சில்லரை வியாபாரிகளிடம் விற்கின்றனர். வியாபாரிகள், விலை, போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள், லாபம் ஆகிய அடிப்படையில் விலை நிர்ணயித்து, பிற பகுதிகளில் விற்பர்.

தோப்பை ஒட்டி, புதுச்சேரி சாலையில், மணமை, கூவத்துார், எல்லையம்மன் கோவில், கடப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், தள்ளுவண்டியிலும் விற்கின்றனர். தனி வாகன பயணியர், அவற்றை விரும்பி வாங்குகின்றனர். இப்பழ சீசன் துவங்கி, தற்போது விற்பனை களைகட்டுகிறது.

Tags

Next Story