தர்மபுரியில் மாம்பழங்களின் விற்பனை ஜோர்
தர்மபுரி உழவர் சந்தையில் விலை கணிசமாக இருப்பதால் மாம்பழங்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது
தர்மபுரி மாவட்டம் விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும் பணப்பயிர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றனர் தற்போது மாம்பழங்களின் சாகுபடி அதிகரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் ஐந்து உழவர் சந்தைகளில் மாம்பழங்களின் விற்பனை தற்போது ஜோராக நடைபெற்று வருகிறது.
செந்தூரா கிலோ 40 ரூபாய், பங்கனபள்ளி கிலோ 65 ரூபாய்,மல்கோவா கிலோ 140 ரூபாய்,அல்போன்சா கிலோ 50 ரூபாய், நீலம் கிலோ 70 ரூபாய், என உழவர் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது தற்போது மாம்பழங்களின் சீசன் என்பதாலலும் விலை கணிசமான அளவு இருப்பதனாலும் மாம்பழ பிரியர்கள் மாம்பழங்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருவதால் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.
Next Story