மருதுபாண்டியர்களுக்கு சொந்த செலவில் மணிமண்டபம்: ஓ.பன்னீர்செல்வம்

மருதுபாண்டியர்களுக்கு சொந்த செலவில் மணிமண்டபம்:  ஓ.பன்னீர்செல்வம்
பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர்
மருதுபாண்டியர்களின் பிறந்த ஊரான நரிக்குடி N.முக்குளம் கிராமத்தில் மணி மண்டபம் சொந்த செலவில் கட்டிக் கொடுப்பேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதிக்குட்பட்ட கருவக்குடி, தச்சநேந்தல், புல்வாய்க்கரை, முக்குளம், நாலூர் விளக்கு, சாலை இலுப்பைகுளம், நரிக்குடி போன்ற கிராமப்புற பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பலாப்பழம் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது நரிக்குடி பகுதியில் கூடியிருந்த பொது மக்களிடம் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு பேசினார். நான் வெற்றி பெற்றால் குடிதண்ணீர் சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகளை தீர்த்து இப்பகுதிக்கு எப்போதும் வந்து செல்வேன் என உறுதி அளித்தார். மருது பாண்டியர்களின் பிறந்த ஊரான நரிக்குடி N.முக்குளம் கிராமத்தில் மணி மண்டபம் எனது சொந்த செலவில் கட்டிக் கொடுப்பேன்.

மேலும் இப்பகுதியில் விவசாயிகள் அதிகம் இருப்பதால் இங்கு நெல்கொள்முதல் நிலையம் அமைத்து தரப்படும், மேலும் காவேரி - குண்டாறு - கிருதுமால் நதி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என பல வாக்குறுதிகளை அளித்து பலாப்பழ சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பொதுக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story