மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பு

மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பு


விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.


விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார்.

விருதுநகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசியவர், கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக நடைபெற்ற இந்த பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கான பட்ஜெட் ஆகவே நடைபெற்றது. அதே போல தற்போது வருகின்ற பட்ஜெட்டும் கார்ப்பரேட் காரர்களுக்கான பட்ஜெட் ஆகவே கருதப்படுகிறது எனவும்,ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைப்பிதழ் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ, சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ வழங்கப்படவில்லை என்றும்.ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வது அவரவர்களின் தனிப்பட்ட விருப்பம். ராமர் கோவில் விழா என்பது முழுக்க முழுக்க ஆர் எஸ். எஸ் .காரர்களுக்கும் பிஜேபி காரர்களுக்குமான விழாவாகவும், தற்போது ஆர்எஸ்எஸ், பாஜக காரர்களின் விழாவாகவே தற்போது மாறி உள்ளது என்றும் ராமர் மீதும் அவர் பக்தியிலும் எந்த குறையும் இல்லை எனவும் ராமர் கோயிலுக்கு செல்வதற்கு எங்களுக்கு விருப்பப்பட்ட நேரத்திற்கு செல்வோம்.எனவும், தெரிவித்தார்

மேலும் அவர் பேசும்பொழுது வருகின்ற 2024 தேர்தலில் விவசாய பிரச்சனை ,பெட்ரோல் டீசல் விலை என அதிக அளவில் பிரச்சினை இருக்கிறது அதிலிருந்து தப்பிக்க பாதுகாப்பாக தற்போது பிஜேபி கையில் எடுத்திருக்கும் ராமர் கோவிலில் விவகாரம் தேர்தல் ஓட்டுக்கானதாக கருதப்படுகிறது எனவும்,மத்திய அரசை பொருத்தவரை, தென் தமிழகத்தில் தொடர்ந்து வளர்ந்து வளரும் வளர்ச்சியை பாஜக அரசு தடுத்து வருகிறது தமிழகத்திற்கும், தென் தமிழகத்திற்கும் வரும் நல்ல திட்டத்தை தடுத்து வருகிறது என்றார் மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் கூட்டணி பற்றி தெரிவிப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் என்பவர் அவருக்கான ஆளுநர் பதவியை இழந்துவிட்டடு, தொடர்ந்து பாஜகவின் மாநில தலைவரை போல் செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஆளுநர் பதவிக்கே களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறார். மோடி எதிர்ப்பு என்பது தமிழகத்தில் பெரும் அலையாக உருவாகியுள்ளது. தமிழக மக்கள் எப்போதும் மோடிக்கு எதிராக செயல்படுபவர்கள் என்றும். பிரதமர் மோடிக்கான வாக்கு தமிழ்நாட்டில் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும்,நிர்மலா சீதாராமனும் அண்ணாமலையும் தமிழர்கள் மீதும் தமிழர்களின் கலாச்சாரத்தின் மீதும் சொந்தம் கொண்டாடுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்,தமிழக மக்களின் நலனுக்காக பாஜக எதையும் செய்யவில்லை எனவும், திருவள்ளுவரைப் பொருத்தவரை அவருக்கு காவி சாயம் பூசுவதை பாஜகவினர் ஆதரிக்கலாம்.

ஆனால் பொதுமக்கள் தமிழக மக்கள் அதற்கு எதிர்ப்பாகவே உள்ளனர். என்றும், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதி தயார் செய்வதற்கு பா. சிதம்பரம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த குழுவிற்கு அனைவரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும், கருத்துக்களை தெரிவிப்பதற்கு இணையதளமும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த கருத்துக்களை சேகரித்து தேர்தல் வாக்குறுதி வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார் மேலும் இந்த நிகழ்வின் போது மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story