ராஜராஜ சோழீசுவரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா!

ராஜராஜ சோழீசுவரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா!

ராஜராஜ சோழீசுவரர் கோயிலில்

ராஜராஜ சோழீசுவரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா!
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீசுவரர் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா மற்றும் திருவாசகம் முற்றோதல் விழா நடைபெற்றது. மாணிக்கவாசகருக்கு ஆண்டுதோறும் ஆனிமாதம் மகம் நட்சத்திரத்தன்று குருபூஜை விழா நடைபெறும். அதன்படி சோழீசுவரர் கோயிலில் நடைபெற்ற குருபூஜை விழாவில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து ஆவுடையநாயகிசமேத சோழீசுவரர் கோயில் முற்றோதல் குழுவினரால் தேவாரம் மற்றும் திருவாசகப்பாடல்கள் ஓதப்பட்டது. விழாவில் சிவனடியார்கள், சிவபக்தர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags

Next Story