தொடர் மழையால் அதிகரிக்கும் மணிமுத்தாறு அணை நீர்மட்டம்
மணிமுத்தாறு அணை
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணை பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் பிரதான அணையான மணிமுத்தாறு அணையின் இன்றைய 11/12/23 நீர்மட்டம் 82.85 அடியாக உள்ளது. இவ்வாறு நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து தங்களது விவசாய பணிகளை தீவிரபடுத்தியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
Next Story