கோவனூரில் மஞ்சுவிரட்டு - 400 காளைகள் பங்கேற்பு 

பொன்னமராவதி அருகே கோவனூரில் நடந்த மஞ்சுவிரட்டில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. சுமார் 50க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டு விடப்பட்டன,

தைமாட்டுப்பொங்களை முன்னிட்டு பொன்னமராவதி அருகே உள்ள கோவனூர் ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக மஞ்சுவிரட்டு நடைபெற்றது இதில் 400 க்கும் மேற்ப்பட்ட காளைகள் பங்கேறன. நாடு முழுவதும் தைப்பொங்கல் தொடங்கி, மாட்டுப் பொங்கல் ஆன இன்று தங்களது வீட்டில் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் பசுமாடுகள் மற்றும் காளை மாடுகளுக்கு அலங்காரம் செய்து மாட்டுப் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

தைப்பொங்கல் ,மாட்டுப் பொங்களை முன்னிட்டு கிராமம் தோறும் உடல் ஆரோக்கியம் ஊர் நன்மை விவசாயம் செழிப்பு உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று பொங்கல் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும் அதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கோவனூரில் கோவில் வீட்டின் அருகே மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

அதன் துவக்கமாக சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது வீட்டில் வளர்த்து வரும் காளை மாடுகளை அலங்கரித்து அங்கு வந்து கோயில் வீட்டில் வழிபாடு செய்த பின்னர் அதன் அருகிலே மஞ்சுவிரட்டு நடைபெற்றது.கோவனூர் ஊரார்கள் சார்பாக ஜவுளி எடுத்துவரப்பட்டு அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி துண்டு அணிவிக்கப்பட்டது ஊர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன அதனைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சுவிரட்டில் 400க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சிறப்பாக விளையாடிய காளைகளுக்கும் பிடிகாரர்களுக்கும் விழா கமிட்டியார்கள் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story