மன்னாதீஸ்வரர் கோவில் தேரோட்டம்

மன்னாதீஸ்வரர் கோவில் தேரோட்டம்

மன்னாதீஸ்வரர் கோவில் தேரோட்டம்

கள்ளகுறிச்சி மாவட்டம், பு.கொணலவாடி மன்னாதீஸ்வரர் கோவிலில் நடைப்பெற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்திலுள்ள மன்னாதீஸ்வரர் பச்சைவாழியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. அதனையொட்டி கடந்த 25ம் தேதி இரவு 9 மணியளவில் பொதுமக்கள் சீர்வரிசை தட்டுக்களுடன் கோவிலை வந்தடைந்தனர். இரவு 10 மணியளவில் சத்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 11 மணியளவில் சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மதியம் 12 மணியளவில் கிராம மக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிப்பட்டனர். தொடர்ந்து மதியம் 2 மணியளவில் சுவாமி சிற்ப அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வலம் வந்தது. தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். மாலை 5 மணியளவில் தீமிதி திருவிழா நடந்தது.

Tags

Next Story