மரக் கழிவுகளால் மாசடையும் மன்னுார் ஊராட்சி குளம்
மாசடைந்த குளம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, மன்னுார் கிராமத்தில் 1,000க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள, போலாட்சி அம்மன் கோவில் அருகில், ஊராட்சிக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த குளம், 20 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வந்தது.
தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளத்தை சுற்றியுள்ள வீடுகள் மற்றும் வாடகை குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக குளத்தில் கலக்கிறது. இதனால், குளத்தின் நீர் மாசடைந்து, பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குளத்தில் மரக்கழிவுகளை கொட்டி வருகின்றனர். எனவே, குளத்தில் கழிவுநீர், மரக்கழிவு மற்றும் குப்பை கொட்டுவதை தடுத்து, குளத்தை துார்வாரி ,முறையாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.