மக்கள் தொடர்பு முகாமுக்கு மனு பெரும் நிகழ்ச்சி

மக்கள் தொடர்பு முகாமுக்கு மனு பெரும் நிகழ்ச்சி

மக்கள் தொடர்பு முகாமுக்கு மனு பெரும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை அருகே பரசலூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாமில் தீர்வு காண பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காளகஸ்தினாதபுரம் ஊராட்சியில் வருகின்ற 28ந் தேதி புதன்கிழமை காலை மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் சமூக பாதுகாப்பு நலத்துறை, வட்ட வழங்கல் துறை உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கு தீர்வு காண உள்ளனர். அந்த வகையில் காளகஸ்தினாதபுரம், பரசலூர், கீழ்மாத்தூர், இளையாளூர் ஆகிய 4 ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது துறை சார்ந்த கோரிக்கைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்து மக்கள் தொடர்பு முகாம் அன்று தீர்வு காணும் வகையில் பொதுமக்களிடம் மனுக்களை பெறும் தொடக்க நிகழ்ச்சி செம்பனார்கோவில் அருகே பரசலூர் ஊராட்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட சமூக பாதுகாப்பு (தனி) துணை கலெக்டர் கீதா தலைமை வகித்தார். தரங்கம்பாடி தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார் சக்திவேல், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரசலூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து துணைக் கலெக்டர் கீதா பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சிவராமகிருஷ்ணன் (காளகஸ்திநாதபுரம்), கவிநிலவன் (இளையாலூர்), அசாருதீன் (கீழ்மாத்தூர்) புருஷோத்தமன் (பரசலூர் ) மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story