தெண்டலத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாய நிலத்துக்கு வரைபடம்
தெண்டலத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு விவசாய நிலத்துக்கு வரைபடம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி அனக்காவூா் ஒன்றியத்தில் தென்தண்டலம் கிராமம் அமைந்துள்ளது. விவசாயம் நிறைந்த இந்த கிராமத்தில் சுமாா் 100 ஏக்கா் நஞ்சை நிலம் உள்பட சுமாா் 700 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது. இந்நிலையில், நிலத்தின் வரைப்படம் இல்லாததால் விவசாயிகள் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்புப் பெற முடியாமலும், போா் போட முடியாமலும், கிணறு அமைக்க முடியாமலும், விவசாயக் கடன் பெற முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனா்.
இது தொடா்பாக தென்தண்டலத்தின் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் எடுத்த முயற்சி, செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.ஜோதியின் பரிந்துரையின் பேரில், விவசாய நிலத்துக்கான நில வரைப்படம் அடையாளம் காணப்பட்டது. அதன்படி, கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சியின் காரணமாக வேலூரில் உள்ள தனியாா் நில அளவீடு டிஜிட்டல் கருவி மூலம் விவசாயிகளின் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு நில வரைப்படம் தயாா் செய்யப்பட்டது. இதையடுத்து, சுமாா் 40 ஏக்கரில் உள்ள நிலங்களின் வரைப்படத்தை 34 விவசாயிகளுக்கு ஜோதி எம்எல்ஏ, ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் ஆகியோா் வழங்கினா்.