மரக்காணம்: கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

மரக்காணம்:  கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

பைல் படம் 

மரக்காணம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ,மரக்காணம் அடுத்துள்ள, மொளசூர் பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் புதுச்சேரி - திண்டிவனம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந் வழியாக பைக்கில் வந்த, 2 பேரை சோதனை செய்ததில் 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. உடன், கஞ்சாவை பறிமுதல் செய்து, புதுச்சேரி, அரியாங்குப்பம் முகமது யூனஸ், 25; அதே பகுதியைச் சேர்ந்த சேந்தன், 21; என்பவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story