மரக்காணம்: திருட வந்த அரசு பள்ளியில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்

மரக்காணம்:  திருட வந்த அரசு பள்ளியில் சமைத்து சாப்பிட்ட திருடர்கள்
சமைத்து சாப்பிட்டுவிட்டு சென்ற திருடர்கள்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 91 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர், இங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் இங்கு காலை சிற்றுண்டி திட்டத்திற்காக சமையலறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் அத்யாவசிய பொருட்கள் தொடர்ந்து திருட்டு போவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் கடந்த மாதம் கூட இவ்வாறே சமையலறையில் இருந்த எண்ணெய், பருப்பு போன்ற அத்யாவசிய பொருட்கள் மற்றும் மாணவ மாணவிகள் உணவு உண்ணும் தட்டு மற்றும் கிளாஸ் ஆகியவை காணாமல் சென்றுள்ளது, இந்த நிலையில் மீண்டும் கடந்த வெள்ளி இரவு பள்ளியில் நுழைந்த மர்ம கும்பல், பூட்டை உடைத்து அத்தியாவசிய பொருட்களை திருடி சென்றதோடு, அங்கேயே பொருட்களை திருடி அதை அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு சிலிண்டரை நிறுத்தாமல் கூட சென்றுள்ளனர், இது சனிக்கிழமை அன்று அத்தியாவசிய பொருட்களை இறக்குவதற்கு லாரி வந்தபோது தெரிய வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த சமையலர் மரக்காணம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மரக்காணம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், முதற்கட்ட விசாரணையில் மது போதையில் இதுபோல் செய்துள்ளார்களா.? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story