மாரண்டஅள்ளி ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
மாரண்டஅள்ளி ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
பாலக்கோடு வட்டத்திற்கு சார்ந்த மாரண்டஅள்ளி தீர்த்தகிரி நகரில் பழமையான ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் தற்பொழுது புதியதாக வேலைப்பாடுகள் செய்த பின்பு இன்று புனித நதி தீர்த்தங்களால் கோயிலில் கலசத்தின் மீது ஊற்றி கும்பாபிஷேக செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன், மற்றும் கோயில் நிர்வாக தலைவர் மாது ஒன்றாவது வார்டு கவுன்சிலர் கீதாவடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதற்கு முன்பு ஊர் பொதுமக்கள் பக்தர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். சுற்று பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையின் மீது பால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் அம்மனை தரிசித்து சென்றனர்.
Next Story