டிசம்பர் 16ல் மாரத்தான் போட்டி - மாவட்ட ஆட்சியர் தகவல்

டிசம்பர் 16ல் மாரத்தான் போட்டி - மாவட்ட ஆட்சியர் தகவல்

மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் 

சிவகங்கை மாவட்டத்தில், பள்ளி / கல்லுாரி மாணவ / மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே ”மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்துடன், போதை பொருள்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வருகின்ற 16.12.2023 அன்று, காலை 5.30 மணிக்கு நெடுந்துார ஓட்டப்போட்டி (Marathon) நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் பள்ளி / கல்லுாரிகளில் நேரடியாக பயிலும் 14 - வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்களாக இருத்தல் வேண்டும். தாங்கள் பயிலும் கல்வி நிலையம் மூலம் பதிவு செய்திடல் வேண்டும், 18-30 வயது வரம்புடைய தன்னார்வலர்களாக இருப்பின் விழிப்புணர்வு நோக்கில் கலந்து கொள்ளலாம். இருபாலருக்கும் நெடுந்துார ஓட்டப்போட்டிக்கான துாரம் 5 கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்கள் பெறும் நபர்களுக்கு, பதக்கம் (medal), கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் Appreciation Certificate வழங்கப்படும், போட்டியில் கலந்துகொள்பவர்கள் போட்டி நாளான 16.12.2023 அன்று காலை சரியாக 5.30 மணிக்கு, தங்கள் வருகையை உறுதி செய்திடல் வேண்டும். நெடுந்துார ஓட்டப்போட்டி (Marathon) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கி நடைபெறவுள்ளது. பங்கேற்பாளர்கள் போட்டி நாளன்று நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இப்போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டையினையும், கல்வி நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரினையும் கண்டிப்பாக பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

தன்னார்வலர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஓட்டுநர் உரிம அட்டை ஆகியவற்றினை சமர்ப்பிப்பதுடன் தங்களது சுய மின்னஞ்சல் முகவரியினையும் கண்டிப்பாக தெரிவித்தல் வேண்டும். இப்போட்டியில், முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் 14-18 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவு மற்றும் 18-30 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கு, முதல் பரிசாக ரூ.10,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.7,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.5,000/-மும் ரொக்கத்தொகையாக வழங்கப்படும். இப்போட்டியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி திருப்பத்தூர் சாலை வழியாக கோர்ட் வாசல் சென்று, அங்கிருந்து சிவகங்கை தாலுகா அலுவலக பாதை வழியாக பெருந்திட்ட வளாகத்தின் வெளிவட்டப்பாதையில் LIC வழியாக புதிய நீதிமன்றம் சென்று பின்பு அங்கிருந்து மகளிர் கல்லூரி மற்றும் திருப்பத்தூர் சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலக உள்வட்டப்பாதையில் மின்வாரிய அலுவலகம் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான கட்டிட வாசல் முன்பு நிறைவடைவதற்கென திட்டமிடப்பட்டுள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்களது பெயரினை https;//sivaganga.nic.in என்ற தரவுத்தளத்தில் (Online Portal)ல் பதிவு செய்து, நெடுந்தூர ஓட்டப்போட்டியில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story