கொங்கணாபுரத்தில் மாரத்தான் போட்டி: 1688 பேர் பங்கேற்பு

கொங்கணாபுரத்தில் மாரத்தான் போட்டி:  1688 பேர் பங்கேற்பு

பரிசு வழங்கிய நிர்வாகிகள்

கொங்கணாபுரம் அறக்கட்டளையின் வீரம் செறிந்த நம் முன்னோர்களின் நினைவாக மாநில அளவில் முத்து மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கொங்கணாபுரம் அறக்கட்டளையின் வீரம் செறிந்த நம் முன்னோர்களின் நினைவாக நடைபெற்ற மாநில அளவிலான முத்து (மாரத்தான்)தொலையோட்டம் 1688 பேர் பங்கேற்பு இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் உள்ள, கொங்கணாபுரம் அறக்கட்டளையின் வீரம் செறிந்த நம் முன்னோர்களின் நினைவாக மாநில அளவிலான முத்து (மாரத்தான்) தொலைவோட்டத்தின் 27ம் ஆண்டு போட்டியில் 8 கிலோமீட்டர் தூரம் முதல் 42 கிலோமீட்டர் வரை 11 பிரிவுகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தமிழக முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1688 பேர் ஆண்,பெண் இரு பாலரும் கலந்து கொண்டனர்.

விறுவிறுப்பான நடைபெற்ற இந்த போட்டிகளை தனியார் நிறுவன அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாரத்தான் போட்டிகளை தொடங்கி வைத்தார்கள். இதில் 42 கிலோ மீட்டர் துாரம் உள்ள ஆண்கள் மாரத்தான் போட்டியில் 2 மணி 32 நிமிடம் 22 நொடியில் ஓடிய திருவண்ணாமலையை சேர்ந்த சக்திவேல் என்பவர் முதல் பரிசாக ரூபாய் 50 ஆயிரம் மற்றும் கூடுதலாக 25,000 பரிசுத்தொகையினை பெற்றார்.

2 மணி 36 நிமிடத்தில் ஓடிய மதுரையை சேர்ந்த வினோத்குமார் என்பவர் இரண்டாம் பரிசாக ரூபாய் 30 ஆயிரமும், 2 மணி 43 நிமிடம் 30 நொடியில் ஈரோட்டை சேர்ந்த சிவானந்தம் என்பவர் மூன்றாம் பரிசாக ரூபாய் 15 ஆயிரமும் பெற்றார்கள்.

42 கிலோமீட்டர் துார பெண்கள் மாரத்தான் போட்டியில் திருப்பூரை சேர்ந்த ஸ்வேதா முதல் பரிசாக ரூபாய் 50 ஆயிரமும், தஞ்சாவூரை சேர்ந்த சுகன்யா இரண்டாம் பரிசாக ரூபாய் 30 ஆயிரமும், அந்தியூரை சேர்ந்த வித்யா என்பவர் மூன்றாம் பரிசாக ரூபாய் 15 ஆயிரமும் பெற்றார்கள்.

21 கிலோமீட்டர் தூரம் உள்ள ஆண்கள் அரை மாரத்தான் போட்டியில் ஒரு மணி 14 நிமிடம் 52 நொடியில் கோவையை சேர்ந்த சதீஷ்குமார் முதல் பரிசும், ஒரு மணி 15 நிமிடம் 22 நொடியில் ஓடிய சேலத்தை சேர்ந்த சேர்ந்த வடிவேல் இரண்டாம் பரிசும், ஒரு மணி 18 நிமிடம் 10 நொடியில் ஓடிய கோவையை சேர்ந்த அருண் மூன்றாம் பரிசும் பெற்றார்கள்.

21 கிலோமீட்டர் தூரம் உள்ள பெண்கள் மாரத்தான் போட்டியில் ஒரு மணி 31 நிமிடம் 30 நொடியில் ஓடிய கோவையை சேர்ந்த செளமியா முதல் பரிசும், ஒரு மணி 31 நிமிடம் 23 நொடியில் ஓடிய திருச்சியை சேர்ந்த கிருத்திகா இரண்டாம் பரிசும், ஒரு மணி 39 நிமிடம் 55 நொடியில் ஓடிய ஈரோட்டை சேர்ந்த பவித்ரா என்பவர் மூன்றாம் பரிசும் பெற்றார்கள்.

அதேபோல், 11, 6, 3 கிலோமீட்டர் தூரம் உள்ள போட்டிகள் மற்றும் பெரியவர்களுக்கான 8 கிலோ மீட்டர் துார நடைபயண போட்டி என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கொங்கணாபுரம் நாச்சியப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் ஆயிகவுண்டர் தலைமை தாங்கினார்.

செயலாளர் மணிசங்கர் வரவேற்று பேசினார். சேலம் மாவட்ட அத்லெக்டிக் சங்க தலைவர் அகிலன், ஸ்லெக்ட் நிறுவன மேலாளர் நமச்சிவாயம், ஆகநல் பள்ளி இயக்குனர் சுப்பரமணியம் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.

Tags

Next Story