வத்தலக்குண்டு அருகே மரக்கன்றுகளுடன் மாரத்தான் ஓட்டம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பி.வி.பி கல்லூரி சார்பில் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பி.வி.பி கல்லூரி சார்பில் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தும் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாரத்தான் வீரர்கள் ஓட்டத்தில் பங்கேற்றனர். மூன்று பிரிவுகளாக தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை வத்தலக்குண்டு ஒன்றிய குழு தலைவர் பரமேஸ்வரி முருகன் துவக்கி வைத்தார்.

ஆடவருக்கான மாரத்தான் ஓட்டம் வத்தலகுண்டு காளியம்மன் கோவில் தொடங்கி சிங்காரக்கோட்டை வரையில் 7 கிலோமீட்டர் நடைபெற்றது.இப்போட்டியில் கலந்துகொண்ட பட்டிவீரன்பட்டி பள்ளி மாணவர்கள் கைகளில் மரக்கன்றுகளை ஏந்திய வண்ணம் மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story