வந்தவாசி பகுதி பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவம்

வந்தவாசி பகுதி பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவம்

வந்தவாசி பகுதி பெருமாள் கோவிலில் மார்கழி உற்சவம்

பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மார்கழி மாதப் பிறப்பு முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. வந்தவாசி ஸ்ரீ ரங்கநாயகி தாயார் சமேத ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் நேற்று மார்கழி மாதம் முதல் நாள் விடியற்காலை ஐந்து மணிக்கு பாகவத கோஷ்டிகள் திருப்பாவை பாசுரங்களை பாடியவாறு கோவிலை வலம் வந்தனர். மேலும் பெருமாளுக்கு திருமஞ் சனம் நடந்தேறியது. மூல மூர்த்திகள் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பஜனைக் கோவில் தெருவில் எழுந்தருளியுள்ளகோதண்டராமர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தெள்ளாறு ஆதிநாராயண பெருமாள் கோவிலில் மார்கழி சிறப்பு உபன்யாசம் நடைபெற்றது. மேல்பாதி விஜயராகவப் பெருமாள் கோவிலில் மூல மூர்த்திகளுக்கு விசேஷ திருமஞ் சனம் நடைபெற்றது.

Tags

Next Story