மாரியம்மன் கோயில் தேர் திருவிழா
ஸ்ரீ மாரியம்மன்
திருவையாறு பராசக்தி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத தேர் திருவிழா
திருவையாறு பராசக்தி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத தேர் திருவிழா நடந்தது.திருவையாறு மேல வீதி பராசக்தி ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் பங் குனி மாத திருவிழா கடந்த 10ம் தேதி கம்பம் நடுதல் மற்றும் பூச்சொறிதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முக்கிய திருவிழாவான தேர் திருவிழா நடந்தது. தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து பராசக்தி ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங் காரத்தில் கோயில் பிரகாரம் வலம் வந்து தேரில் எழுந் தருளினார். பஞ்சமுக தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஏராளமான பெண்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு முக்கிய வீதிகள் வழியாக சன்னதியை வந்தடைந்தது. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டி மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story