கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கம்பம் நடுதலுடன் தொடக்கம்

கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கம்பம் நடுதலுடன் தொடக்கம்


சங்ககிரியில் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது.


சங்ககிரியில் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் உள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா பிப்.20 செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொறிதல், கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்குகிறது. அதனையடுத்து மார்ச்.5ம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது. சங்ககிரி மலையில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா பிப்.20ஆம் தேதி இரவு பூச்சொறிதல், கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்குகிறது.

அதனையடுத்து தினசரி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற உள்ளது இதனையடுத்து பொங்கல் விழா மார்ச்.5ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறஉள்ளது. இதேபோல் வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன், வாணியர் காலனி அருள்மிகு அல்லிமாரியம்மன் பொங்கல் விழா சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா பிப்.20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு பூச்சொறிதல், கம்பம் நடுதல் வைபவத்துடன் தொடங்க உள்ளது.

இதனையடுத்து மார்ச்.6 ஆம் தேதி பொங்கல்விழாவும், மார்ச்.7 ஆம் தேதி நடப்பட்ட கம்பம் ஊர் நல்ல கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடலும், மார்ச்.8 ஆம் தேதி ஸ்ரீ சக்தி மாரியம்மன் உற்சவமூர்த்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக உலா வருவதலும் நடைபெற உள்ளது. இதேபோல் சங்ககிரி நகர், வாணியர் காலனியில் உள்ள அருள்மிகு அல்லிமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவும் பிப்.20ம் தேதி தொடங்கி மார்ச் 6ம் தேதி பொங்கல் விழா நடைபெற உள்ளது. குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story