மாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா

மாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா

மாரியம்மன் திருக்கோயில் திருத்தேர் திருவிழா

பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரியில் உள்ள மாரியம்மன் கோவில் திருத்தேர் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், செஞ்சேரியில் ஸ்ரீ பெரிய மாரியம்மன், ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. இத் திருக்கோயிலில் திருத்தேர் திருவிழா ஜூன் 4ம் தேதி பூச்சொரிதல் விழாவும் ஜுன் 11ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பொங்கல் வழிபாடு , அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஜூன் 17ம் தேதி பால் குட ஊர்வலம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவிழா ஜூன் 18ஆம் தேதி இன்று பகல் 12 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. ஸ்ரீபெரிய மாரியம்மன், ஸ்ரீ மஹாசக்தி மாரியம்மன் சிறப்பு பூஜைக்கு பிறகு மலர் அலங்காரம் செய்யப்பட்டு திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர், அதனையடுத்து பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இத்தேர் திருவிழாவில் செஞ்சேரி பாளையம் குரும்பலூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story