மாரியம்மன் கோவில் திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாரியம்மன் கோவில் திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு

மாரியம்மன் கோயில் திருவிழா

திருப்பத்தூர் அடுத்த அடியத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா ஐந்து ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டத்தில்மிகவும் பிரசித்தி பெற்ற கிராமப்புற மக்களின் நம்பிக்கை தெய்வமாக விளங்கி வருவது அடியத்தூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் இங்கு வேண்டும் வரம் கேட்பவர்களக்கு உடனே அருள்பாளிக்கும் அன்னையாக விளங்கும் சக்தியான தெய்வமாக விளங்குகிறது. ஒவ்வொரு வருடமும் காணும் பொங்கல் தினத்தன்று ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில் அடியத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் முன்பு பக்தர்கள் அம்மனுக்கு கோழி, ஆடுகள் வெட்டியும் பொங்கல் வைத்தும் தங்களது நேர்த்தி கடன் செலுத்தினர்.

பின்னர் வான வேடிக்கை, நாட்டியாலயா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெற்றது..

Tags

Next Story