மரைன் இன்ஜினியர் தற்கொலை

மரைன் இன்ஜினியர் தற்கொலை

தற்கொலை 

தூத்துக்குடியில் மரைன் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெருவைச் சேர்ந்தவர் லூயிஸ் மைக்கேல் மகன் அந்தோணி அஸ்வின் (26). மரைன் இன்ஜனியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி ஈராக் நாட்டிற்கு கப்பல் பணிக்கு செல்ல வேண்டியிருந்ததாம். ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரது விமான டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாம். இதனால் மனவேதனையில் இருந்த அந்தோணி அஸ்வின் நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story