முட்டத்தில் பணியில் இருந்த மரைன் போலீஸ் மண்டை உடைப்பு
முட்டத்தில் பணியில் இருந்த மரைன் போலீஸ் மண்டை உடைப்பு - 2 பேர் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதி சேர்ந்தவர் சதாசிவம் (52). இவர் குளச்சல் கடலோர போலீசில் முதல் நிலை காவலராக வேலை செய்து வருகிறார். நேற்று இவர் முட்டம் சுற்றுலா பகுதியில் பணியில் இருந்தார். மாலை நேரத்தில் கடற்கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த இருவர் சதாசிவத்திடம் தகராறில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென அவர்கள் சதாசிவத்தை கீழே தள்ளி கல்லால் தலையில் தாக்கினார். இதில் அவருக்கு மண்டை உடைந்தது. உடனே அவரை மீட்டு முட்டம் தனியார் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவர் மண்டையில் 14 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முட்டத்தில் போலீஸ் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து கண்டால் தெரியும். இரு நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story