கம்பம் நடும் விழா உடன் துவங்கியது மாரியம்மன் கோவில் திருவிழா
மாரியம்மன் கோவில் திருவிழா
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா காப்பு கட்டு விழா வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, புஞ்சை புகலூர், அருகில் உள்ள தவிட்டுப்பாளையத்தில், அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாரியம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று மகாமாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ மகா மாரியம்மனை தரிசனம் செய்து வணங்கினர்.
Next Story