தலைவாசல் அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம்

தலைவாசல் அருகே மாரியம்மன் கோவில் தேரோட்டம்

கோயில் தேரோட்டம்

தலைவாசல் அருகே மாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி காலையில் பக்தர்கள் அக்னி கரகம், பூங்கரகம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பால்குடம் ஊர்வலம், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் காலை 11 மணியளவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவையொட்டி ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சேலம் சரக போலீஸ் டி. ஐ. ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு போலீசாருக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

Tags

Next Story