உத்திரமேரூர் அருகே மாரியம்மன் திருக்கோயில் மண்டல பூஜை நிறைவு

உத்திரமேரூர் அருகே மாரியம்மன் திருக்கோயில் மண்டல பூஜை நிறைவு

உத்திரமேரூர் அருகே மாரியம்மன் திருக்கோயில் மண்டல பூஜை நிறைவு

திரளான பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்
கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் பகுதியில் மிகவும் பழமையான புராதான கோயில்களும் பரிகார தளங்களும் அமைந்துள்ளது. அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த ஆனைப்பள்ளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பல நூற்றாண்டுகளை கடந்து இருந்து வந்த நிலையில் , அதனை புனரமைத்து புதிய மண்டபத்துடன் கூடிய விமான கோபுரம் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம் 20ஆம் தேதி கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கி நான்கு கால சிறப்பு ஓம பூஜைகளுக்குப் பிறகு சிறப்பாக சிவாச்சாரியார்களால் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது . கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து தினமும் 48 நாள் மண்டல பூஜைகள் நடந்த நிலையில், மண்டல பூஜை நிறைவையொட்டி கோவில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள் தலைமையில் ஹோமம் வளர்க்கப்பட்டு, அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிஷேக பூஜை பொருட்களால் சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், 108 சங்குகள் கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த மண்டல பூஜை விழாவில் முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் பங்கேற்று பக்தர்களுடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்தார். இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story