திருமண நிதியுதவி

திருமண நிதியுதவி
திருமண உதவி வழங்கிய அமைச்சர்
கன்னியாகுமரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கம் வழங்கினார். இதில் 516 பட்டதாரி பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.2.58 கோடி திருமண நிதியுதவியும், 183 பட்டதாரி அல்லாத பயனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களும், ரூ.45.75 இலட்சம் திருமண நிதியுதவியும் என மொத்தம் 699 பயனாளிகளுக்கு ரூ.3.04 கோடி மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாவட்ட சமூக நல அலுவலர் ஆர்.சரோஜினி, அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story