கணவன் கண்டித்ததால் மனைவி தற்கொலை

கணவன் கண்டித்ததால் மனைவி தற்கொலை

கோப்பு படம்

நல்லம்பள்ளி அருகே ஏலகிரி கிராமத்தில் கணவன் கண்டித்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட, ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி நந்தினி,இவர்கள் காதலித்து திருமணம்செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை நந்தினி சமைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை வெங்கடேசன் கேட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த நந்தினி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்துவிட்டதாக தெரி வித்தனர்.

இதுபற்றி தொப்பூர் காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story