குமரித் தந்தை மார்ஷல் நேசமணியின் 130-வது பிறந்த நாள் விழா

மார்ஷல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
குமரி தந்தை என போற்றப்படும் மார்ஷல் நேசமணி குமரி இணைப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். கேரளாவோடு இருந்த தமிழ்ப்பகுதிகள் தனி ஜில்லாவாக அமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முழங்கியவர். தொடர் போராட்டங்கள் நடத்தி 1956-ஆம் ஆண்டு, நவம்பர் 1-ம் தேதி முதல், தமிழகப் பகுதிகள் தங்கள் உரிமையை நிலைநிறுத்தியதோடு, தமிழகப் பகுதிகள் அனைத்தும் தாய்த் தமிழகத்துடன் இணைந்து. கன்னியாகுமரி மாவட்டம் தோன்றியதற்கு, முழு முதல் காரணமாக அமைந்தவர் மார்ஷல் நேசமணி .
அவரது 130-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் நாகர்கோவில் மார்ஷல் நேசமணியின் மணிமண்டபத்திலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட்,உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
