மார்த்தாண்டம் பஸ் நிலையம் ரூ. 66 லட்சத்தில் சீரமைப்பு பணி தொடக்கம்

மார்த்தாண்டம் பஸ் நிலையம் ரூ. 66 லட்சத்தில் சீரமைப்பு பணி தொடக்கம்
X
பஸ் நிலைய சீரமைப்பு பணியை துவக்கிய நாராட்சி தலைவர் பொன். ஆசைத்தம்பி .
அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பஸ் நிலையம் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு 54 கடைகளும் போக்குவரத்து கழக அலுவலகம், அம்மா உணவகம், போலீஸ் அவுட்போஸ்ட் போன்றவை உள்ளது.

டவுன்பஸ்கள் மற்றும் விரைவு பஸ்கள் நிற்பதற்கு தனித்தனியாக வசதிகள் உள்ளன. இந்த பஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து மழை நீர் ஒழுகுவதுடன், பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பஸ் நிலையத்தை சீரமைத்து வர்ணம் பூச வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து குழித்துறை நகராட்சி சார்பில் ரூ. 66 லட்சத்தில் பராமரிப்பு பணி தொடங்கப்பட்டது.

பஸ் நிலைய உட்பகுதியில் உள்ள கட்டிடத்தின் மேல் பகுதி காங்கிரீட் மேல் தளம் அகற்றப்பட்டு, புதியதாக கான்கிரீட் போட்டு பராமரிக்கப்பட உள்ளது. மேலும் கட்டிடங்கள் முழுவதும் பெயின்ட் அடிக்கப்பட உள்ளது.

இதற்கான பணியை நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி நேற்று தொடக்கி வைத்தார். ஆணையாளர் ராமத்திலகம், ஓவர்சியர் விஜய் பிரசாத், கவுன்சிலர்கள் அருள், விஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story