கல்லூரி ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கல்லூரி ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோப்பு படம்

மார்த்தாண்டம் அருகே தனியார் கல்லூரி ஊழியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஐரணிபுரம் பரமன் கரையைச் சேர்ந்தவர் தேவராஜ் இவரது மகன் டொனால்ட் டேவிட்சன் . இவர் சென்னையில் உள்ள கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். ஊரில் இருந்த அவர் நேற்று திடீரென கைதக்காட்டு விளை பகுதியில் சுயநிவின்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

அவரை அக்கம்பாக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசலோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவர் எவ்வாறு இறந்தார், விஷம் ஏதேனும் அருந்தினாரா என போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story