பேராவூரணியில் தற்காப்புக்கலை பயிற்சி முகாம் 

பேராவூரணியில் தற்காப்புக்கலை பயிற்சி முகாம் 

சான்றிதழ் வழங்கல் 

பேராவூரணியில் தற்காப்புக்கலை பயிற்சி முகாமில் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி, ஆண்டவன்கோவில் அமிர்தம் மஹாலில், தாய் புடோகான் ஸ்போர்ட்ஸ் கராத்தே (டோஜோ), தாய்த் தமிழர் பாரம்பரிய சிலம்பக் கழகம் சார்பில், சனிக்கிழமையன்று ஒருநாள் தற்காப்புக்கலை பயிற்சி முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை பயிற்சியாளர் ஷிகான் கே.பாண்டியன் தலைமை வகித்தார். தற்காப்புக்கலை சிறப்பு பயிற்சியாளர்கள் சந்திரசேகரன் (கரூர்), குமார் (கும்பகோணம்), சசிகுமார் (குளித்தலை), பாலாஜி (திருச்சி) மற்றும் தற்காப்புக்கலை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு ஜீஜீட்சு,

கராத்தே, சிலம்பம், குமித்தே, நஞ்சாக், புதிய தற்காப்புக் கலை நுணுக்கங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இதில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காலை 8 முதல் மாலை 5 மணி வரை பயிற்சி பெற்றனர். பின்னர் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிறைவாக, இரண்டாம் நிலை பயிற்சியாளர் எஸ்.வி.சிவபாலன் நன்றி கூறினார்.

Tags

Next Story