தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு - மாணவர்களுக்கு சான்றிதழ்

மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் ஸ்போர்ட்ஸ் ஷோட்டோகான் கராத்தோ டூ பெடரேஷன், தென்னிந்தியா, கராத்தே டூ கசோசியேஷன் மற்றும் சூரிய ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து இளைய தலைமுறையினருக்கு இடையே தர்காப்பு கலையை ஊக்குவிக்கும் வகையில் இலவச கோடைக்கால கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
இதில் காவேரிப்பட்டிணம், திம்மாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து மூன்று வயது முதல் 15 வயது வரையிலான மாணவ, மாணவிகள் சுமார் 150 பேர் ஆர்வத்துடன் இந் பயிற்ச முகமில் கலந்துக் கொண்டனர். ஆர்வத்துடன் கலந்துக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது பயிற்சி மாஸ்டர் ரென்சிமாரியப்பன் 6-வது பிளாக் பெல்ட் மலேசியா அவர்கள் தலைமையில் நடைபெற்றது துணைப் பயிற்சியாளர்கள் சூர்யா, அசோக்குமார் தங்கம், தம்பிதுரை பிரவின் குமார் ஆகியோர் சிறப்பான பயிற்சியினை அளித்தனர். இதில் நான்ஷாக்கு, குமிட்டி டீம் கட்டா, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பயிற்சிகளை அளித்தனர்.
ஒரு மாதக் காலம் சிறப்பாக பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பெல்ட் வழங்கும் விழா நடைப்பெற்றது. இதற்கான விழா காவேரிப்பட்டிணத்தில் உள்ள குமார்ஜோதி பள்ளி விளாகத்தில் நடைப்பெற்றது. பள்ளியின் தாளாளர் ஆனநதிஜெயபிரகாஷ் தலைமையில் நடைப்பெற்றது. மாஸ்டர் ம ஹன்சி நடராஜ் 8-வது டான் பிளாக் பெல்ட் கலந்துக்கொண்டு 30 நாள் சிறந்த முறையில் தற்காப்பு கலையை கற்றுக் கொண்ட மாணவ, மாணவிகளுக்கு மஞ்சள், ஆரஞ்ச், பச்சை, நிலம் உள்ளிட்ட பல்வேறு வகையான பெல்ட் வகைகள் மட்டுமின்றி சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
அப்போது படிப்பில் மட்டுமே கவனம் இருந்தால் போதாது தற்காப்பு கலைகளிலும் கவனம் செலுத்தி நமது பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார், மேலும் இந்த விழாவில் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தனியார் பள்ளி சங்கம் செயலாளர் மகேந்திரன், பல்வேறு கல்வி நிலையங்களை சார்ந்த மாநில நல்லாசிரியர் பாலமுருகன், கோபிகிருஷ்ணஸ் பள்ளி தாளாளர் கிருஷ்ணன், காந்தி, கம்பன் கழகம் நிர்வாகிகள் ரவிந்தர், முருகேசன், பாலாஜி, ரங்கநாதன், ஸ்ரீரங்கன் உள்ளிட்ட ஏராளமான பெற்றோர்களும் இந்த விழாவில் கலந்துக் கொண்டு சிறப்புத்தனர்.
