குமரி அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி
குமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆணையின்படி குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி 90 அரசு நடுநிலை பள்ளிகளிலும், 131 அரசு உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் 6 முதல் 12ம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி டிசம்பர் தொடக்கம் முதல் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் 10 ஆயிரத்து 232 மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு மணி நேரம் வீதம் பயிற்சி நடைபெறுகிறது. மேலும் இம்மாணவிகளுக்கு பயிற்சியின் போது சத்தான சிற்றுண்டிகள் வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சியை முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி தொடங்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட பெண் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஹரிப்பிரியா, அனைத்து வட்டார வளமையத்தில் உள்ள மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர்.