தியாகி இம்மானுவேல் சேகரன் நூற்றாண்டு விழா - அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
தியாகி இம்மானுவேல் சேகரன் நூற்றாண்டு விழா பாளையாங்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்.அப்போது அவர் பேசும் போது முக்கியமான இந்த விழாவை என்னை பொருத்தவரை தமிழக அரசு நடத்தி இருக்க வேண்டும்.தமிழகத்தில் நாம் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த பிறகு புரட்சியாளர் இமானுவேல் சேகரன் பற்றி நிச்சயமாக மிகப் பெரிய அளவிலே நாம் கொண்டாடுவோம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தேவேந்திர சமுதாயத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற கோரிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவு அளித்து இருக்கிறது.தேவேந்திரகுலவேளாளர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என்று அனைவரும் ஒன்றினைந்து கோரிக்கை வையுங்கள் சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆனநிலையில் புரட்சியாளர் இமானுவேல் சேகரனை ஒரு ஜாதிக்குள் அடக்க எனக்கு விருப்பம் கிடையாது.மது ஒழிப்பு மதுவிலக்கு குறித்து ராம்தாஸை தவிர்த்து யார் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் நான்கு இட ஒதுக்கீடு தமிழகத்தில் இரண்டு இந்தியாவில் பெற்று தந்தவர் மருத்துவர் ராமதாஸ் என்றும் தெரிவித்த அவர் புரட்சியாளர் அம்பேத்கரை தாழ்த்தபட்ட சமுதாயத்தின் தலைவர் என்ற ஒரு சிறிய வட்டத்துக்குள் கொண்டு வந்து விட்டனர்.மகாத்மா காந்திக்கு இணையாக போற்றப்பட வேண்டியவர் அண்ணல் அம்பேத்கர் அவரை ஒரு சிறிய வட்டத்துக்குள் அடைத்தது வருத்தம் அளிக்கிறது இதெல்லாம் எப்போது மாறும் என்றால் என்று பாட்டாளிகள் ஆட்சிக்கு வருகிறார்களோ அன்றுதான் இதெல்லாம் மாறும் நிச்சயமாக விரைவில் இது நடக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.அந்த மனமாற்றத்தை தமிழகம் முழுவதும் நான் பார்த்து வருகிறேன் என்று தெரிவித்தார்.