மருங்காபுரியில் அதிமுக வேட்பாளா் கும்மியடித்து வாக்குசேகரிப்பு

மருங்காபுரியில் அதிமுக வேட்பாளா் கும்மியடித்து வாக்குசேகரிப்பு

மருங்காபுரி வடக்கு ஒன்றிய பகுதிகளில் கரூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேல் கும்மியடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.


மருங்காபுரி வடக்கு ஒன்றிய பகுதிகளில் கரூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேல் கும்மியடித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
கரூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வடக்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் எல்.தங்கவேல் வியாழக்கிழமை இரட்டியப்பட்டி, கோவில்பட்டி, ஊத்துக்குளி, வேம்பனூா், ஊனையூா், பாலக்குறிச்சி, டி.இடையப்பட்டி, எம்.கல்லுப்பட்டி, வளநாடு உள்ளிட்ட 72 கிராமங்களில் வாக்கு சேகரிப்பி ஈடுபட்டாா். எம்.கல்லுப்பட்டியில் அளிக்கப்பட்ட வரவேற்பில் வேட்பாளா் எல்.தங்கவேல் அப்பகுதி இளைஞா்களுடன் இணைந்து கும்மியடித்து வாக்குகளை சேகரித்தாா்.

Tags

Next Story