முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை சந்தித்த மருது சேனை தலைவர்
முன்னாள் அமைச்சரை சந்தித்த மருது சேனை தலைவர்
குன்னத்தூர் அம்மன் கோயிலில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை மருது சேனை தலைவர் சந்தித்தார்.
மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி குன்னத்தூர் அம்மா கோயிலில் இன்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாரை மருது சேனை நிறுவனத் தலைவர் ஆதிநாராயணன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக அதிமுகவிற்கு மருது சேனை அமைப்பு தேர்தலில் தங்களது ஆதரவை தெரிவித்துள்ள நிலையில் இன்று தேர்தல் களப்பணி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் மருது சேனை நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
Next Story