சேலத்தில் மாருதியின் மெகா கிராமிய திருவிழா

சேலத்தில் மாருதியின் மெகா கிராமிய திருவிழா

சேலத்தில் மாருதியின் மெகா கிராமிய திருவிழா

திரிவேணி கார் கம்பெனி மற்றும் எஸ்.எம். மாருதி இணைந்து மாநகராட்சி திடலில் மாருதியின் மெகா திருவிழாவை தொடங்கி வைத்தனர்

சேலம் திரிவேணி கார் கம்பெனி மற்றும் எஸ்.எம். மாருதி இணைந்து மாருதியின் மெகா கிராமிய திருவிழா சேலம் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மாநகராட்சி திடலில் ஆரம்பிக்கப்பட்டது. லிங்கம் டிராவல்ஸ் ஹரி மற்றும் போலீஸ் துறை அதிகாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். இதில் திரிவேணி கார் நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ்குமார், எஸ்.எம். மாருதியின் நிர்வாக இயக்குனர் வம்சி ஆகியோர் கூறுகையில், அதிகபட்ச ஆபர்கள், உங்கள் பழைய காருக்கு சிறந்த விலை, அதிகபட்ச எக்ஸ்சேஞ்ச் போனஸ், அட்டகாசமான நிதிஉதவி திட்டங்கள், ஜனவரி 24-ல் விலை உயர்வு, உடனடி டெலிவரி ஆகிய 6 காரணங்களுக்காக வாடிக்கையாளர்களுக்கு காரை வாங்குகின்றனர்.

எனவே வாடிக்கையாளர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினர். விழாவில் ராமகிருஷ்ணன், ஷாம் ஆகியோர் கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கார் விற்பனை பொது மேலாளர் பூபதி (திரிவேணி), பொது மேலாளர் ராஜா சண்முகம்(எஸ்.எம். கார்ஸ்) மேலாளர்கள் சசிகுமார் (திரிவேணி), குமரேசன் (எஸ்.எம். கார்ஸ்) ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story