மருவத்தூர் : சிறுவர்களிடம் கஞ்சா விற்றவர் கைது
காவல் நிலையம்
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை ஒழிக்கும் வகையில் சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிசம்பர் 01.ம் தேதி பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருவத்தூர் கிராம பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மருவத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி அப்பகுதிக்கு விரைந்து சென்ற உதவி ஆய்வாளர் மற்றும் அவரது குழுவினர் அப்பகுதியில் சிறுவர்களிடம் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமியின் மகன் எழுத்தாணி (எ) பிரபாகரன் (30) என்பவரிடம் தலா 10 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலம் 5 மற்றும் 200 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படியும் குற்றவாளியை பாடாலூர் வட்ட காவல் ஆய்வாளர் மணிவண்ணன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுபோன்று கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சாராயம் போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவலை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம், தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story