மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
வெள்ள பாதிப்புகளை சரி செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தக் கோரி பாளையங்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் வெள்ள பாதிப்புகளை சரி செய்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு 55வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஸ்ரீராம் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், குடிநீர் இணைப்புகளை சரி செய்து உடனடியாக குடிநீர் வழங்கிட வேண்டும். பாதாள சாக்கடை உடைப்பை சீரமைக்க வேண்டும். தொற்று நோய் ஏற்படாமல் மக்களை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், தியாகராஜநகர் கிளைச் செயலர் முபாரக் அலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story